விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சிங்கம்புணரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கம்புணரி,
இந்த நிலையில் மைதீன் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கடந்த 10-ந்தேதி எலிபேஸ்ட்(விஷம்) எடுத்து சாப்பிட்டு விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.