பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கரூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்கம் சார்பில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து திருமாநிலையூரில் அமைந்துள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். இதில், கிளை செயலாளர் சிறும்பண்ணன், மத்திய சங்க துணை தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் சிவராமன் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.