35 மதுபாட்டில்களுடன் முதியவர் கைது

பூவந்தி அருகே 35 மதுபாட்டில்களுடன் முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-18 18:50 GMT
திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இந்த கிராம பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 65) என்பவர் 35 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்