தூத்துக்குடியில் போலீசார் ரத்த தானம்
தூத்துக்குடியில் போலீசார் ரத்த தானம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ஒருவரிடம் இருந்து பெறப்படும் ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும். ஆகையால் ரத்ததானம் வழங்குபவர்கள் மகிழ்ச்சியாக ரத்தம் வழங்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர். இதில் 200 போலீசார் ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.