கோவில்பட்டியில் இந்து கோவில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் இந்து கோவில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
தமிழகத்தில் இந்து கோவில்களை திறக்கக்கோரி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பா,ஜனதா தொகுதி பொறுப்பாளர் பாலு, ஊரக நகர வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நகர செயலாளர் மாரியப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணகுமார், செய்திப் பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன், மாவட்ட துணைத்தலைவர் உமா செல்வி, இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் சுதாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.