தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
எப்போதும்வென்றான் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் மாணிக்கம் (வயது 29). கூலி தொழிலாளி. இவருக்கும், சூரங்குடியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. தற்போது முத்துமாரி சூரங்குடியில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.
கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் தொலைபேசியில் பேசியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வெறுப்பு அடைந்த மாணிக்கம் நேற்று முன்தினம் இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.