தூத்துக்குடியில் 5 மாதத்தில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மாதத்தில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மேற்கண்ட வழக்குகளில் சிக்கி கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 5 மாதங்களில், கொலை, கொள்ளை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 75 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து ரவுடிகளை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.