சேனூர் கிராமத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜித பணி
சேனூர் கிராமத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜித பணி
காட்பாடி
காட்பாடி தாலுகா கரசமங்கலம் கிராமத்தில் இருந்து பேரூர் செல்லும் வழியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நில ஆர்ஜிதம் செய்ய ரூ.2 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நில உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மேம்பாலம் அமைய உள்ள இடம், அதுகுறித்த வரைபடத்தை வைத்து சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.