கோவில் பணியாளர்கள் 400 பேருக்கு நிவாரண நிதி-மளிகை பொருட்கள்
திருச்செந்தூரில் கோவில் பணியாளர்கள் 400 பேருக்கு நிவாரண நிதி, மளிகை பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியாற்றும் ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள், முடி காணிக்கை எடுக்கும் தொழிலாளர்கள், கிராம கோவில் பூசாரிகள் என மொத்தம் 400 பேருக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, கோவில் கலையரங்கில் ேநற்று மாலை நடந்தது.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா வரவேற்று பேசினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 400 பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தீவிர நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. ேமலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான தேதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். மேலும் இக்கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தை கருங்கல்லால் கட்டுவதற்கும் உரிய நடவடிக்கையை எடுப்பார். தி.மு.க. ஆட்சியில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த அரசு உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்ெசந்தூர் கோவில் விருந்தினர் மாளிகை பெயர் பலகையில் இருந்த செல்லக்கனி பெயர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அகற்றப்பட்டது. தற்போது கோவில் விருந்தினர் மாளிகைக்கு செல்லக்கனி விருந்தினர் மாளிகை என மீண்டும் பெயர் சூட்ட உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி கோவில் விருந்தினர் மாளிைகயில் ெசல்லக்கனி ெபயர் இடம்பெற்ற புதிய ெபயர் பலகையையும், விருந்தினர் மாளிகைக்குள் வைக்கப்பட்ட செல்லக்கனி அம்மாளின் புகைப்படத்தையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பாலசுந்தரம், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் சித்தா டாக்டர் ரவி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.