பயணிகளுடன் மீண்டும் ரெயில் போக்குவரத்து

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுதான சென்சார் கருவி சரி செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளுடன் மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

Update: 2021-06-18 17:31 GMT
ராமேசுவரம், 
பாம்பன் தூக்கு பாலத்தில் பழுதான சென்சார் கருவி சரி செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளுடன் மீண்டும் ெரயில் போக்குவரத்து தொடங்கியது. ரெயில்
அதிர்வு
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ெரயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.  கடந்த 16-ந் தேதி  சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ெரயில் தூக்குப்பாலத்தை கடந்து செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பாம்பன் ெரயில் பாலத்தில் பயணிகளுடன் ெரயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. 
இதையடுத்து பாம்பன் ெரயில் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஐ.ஐ.டி. குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் பாம்பன் ெரயில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி ஒன்று பழுதாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழுதான சென்சார் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஐ.ஐ.டி. மூலம் மீண்டும் புதிய சென்சார் கருவி பொருத்தப்பட்டது. 
மீண்டும் இயக்கம்
பின்னர் பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகளுடன் தூக்குப்பாலம் வழியாக பலமுறை ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையின்போது தூக்குப்பாலத்தில் எந்த ஒரு அதிர்வும் இல்லை என்பது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து பயணிகளுடன் பாம்பன் ெரயில் பாலம் வழியாக ெரயில் போக்குவரத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு நேற்று அதிகாலை வந்த சேது எக்ஸ்பிரஸ் ெரயில் மற்றும் பகல் 12 மணிக்கு வந்த திருச்சி பயணிகள் ெரயிலும் வழக்கம்போல் பயணிகளுடன் பாம்பன் ெரயில் பாலம் வழியாக தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்து ராமேசுவரம் வந்தடைந்தது.
 பாம்பன் ெரயில் பாலம் வழியாக மீண்டும் பயணிகள் ெரயில் போக்குவரத்து தொடங்கப் பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்