சிறுவன் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுவன் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-06-18 17:19 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ரவீந்திரன் (வயது 24) என்பவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்ய முயறன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இதேபோல் வாணியம்பாடி, கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, ககரிமாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த பெண்ணின் உறவினர் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்