திருப்பூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருப்பூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை;

Update: 2021-06-18 17:15 GMT
போடிப்பட்டி, 
திருப்பூர் மாவட்ட எல்லையான மடத்துக்குளம் பகுதியை ஒட்டியுள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லை சாமிநாதபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் அங்கிருந்து மதுவகைகளைக் கடத்தி வந்து திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 
இதனையடுத்து மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மது கடத்துபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதன்படி கடந்த 5 நாட்களில் 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்