பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-18 17:15 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் தங்கப்பாபுரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி ஜெயந்தி (வயது35). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த காட்டுராஜா மகன் பாலமுருகன் (35) என்பவருக்கும் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயந்தி வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலமுருகன் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டாராம். இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்