அரசு மாணவிகள் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

அரசு மாணவிகள் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

Update: 2021-06-18 17:07 GMT
உடுமலை:
உடுமலை ஏரிப்பாளையத்தில், பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்ட அரசு மாணவிகள் விடுதி உள்ளது. பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த மாணவிகள், இந்த விடுதியில் தங்கியிருந்து பல பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த மாணவியர் விடுதியும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடுதியின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் முழுவதும் திடீரென்று அடியோடு இடிந்து விழுந்தது. குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி இருந்த சுற்றுச்சுவர் திடீரென்று அடியோடு இடிந்து விழுந்ததால் அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மாணவிகள் விடுதியின் முன்பக்க கதவு  மற்றும் விடுதி கட்டிடத்தின் கதவு ஆகியவை பூட்டப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால் இந்த விடுதி வளாகம் திறந்த வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்