குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது
குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே பார்த்திபனூர் - அருங்குளம் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (27) என்பவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் தகாதவார்த்தைகளால் பேசி வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர் காவல் படை வீரர் சுரேஷ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் பணி செய்ய விடாமல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.