இன்று மின்சாரம் நிறுத்தம்

ராமநாதபுரம், திருவாடானை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2021-06-18 16:41 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ராமநாதபுரம் பி1காவல் நிலைய பகுதி, வண்டிக்கார தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதி கேணிக்கரை மெயின் ரோடு, காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி மெயின் ரோடு, தேவிபட்டினம் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் மின் உதவி பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல திருவாடானை தாலுகா, நகரிகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஓரியூர், புதுவயல், வெள்ளையபுரம், என்.மங்கலம், கட்டிவயல், பனஞ்சாயல், புல்லூர், பதனக்குடி, சிறுகம்பையூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்