திண்டுக்கல் அருகே திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்ட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த சில நாட்களாக அடிக்கடி வாந்தி எடுத்ததோடு, சில நேரம் மயங்கி விழுந்தாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அதில் திருச்சி புதுப்பாலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு (வயது 32) என்பவர், சிறுமியின் கிராமத்தில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது பாபுவின் ஆட்டோவில் சென்ற சிறுமியிடம் அவர் பேச்சு கொடுத்துள்ளார். அதன்மூலம் சிறுமியை காதலிப்பதாக கூறி பாபு நெருங்கி பழகி இருக்கிறார்.
மேலும் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.