காரில் இருந்த 138 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரில் இருந்த 138 மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-06-18 14:52 GMT
இடிகரை

கோவை கணபதி மணியகாரன்பாளையத்தை சேர்ந்த வேலுமணி என்பவரின் மகன் சம்பத்குமார் (45). 

இடையார்பாளையம் லூனா நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி (61). 

இவர்கள் 2 பேரும் இடிகரையில் இருந்து துடியலூர் நோக்கி மணியகாரம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.  

அப்போது, துடியலூரில் இருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சம்பத்குமார், சுப்பிரமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் காரை ஓட்டி வந்த சங்கர் படுகாயம் அடைந்தார்.


இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் சப் - இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காரை சோதனை செய்தனர். 

அப்போது அந்த காரில் 3 பெட்டிகளில் கர்நாடகா மாநிலத்தில் தயாரான 138 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இது குறித்து கார் டிரைவர் சங்கர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்