திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு பகுதியில் மின்பாதையில் சீரமைப்பு பணிகள்
திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு பகுதியில் மின்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை அவ்வப்போது மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி,
திருவையாறு உப கோட்டத்திற்குட்பட்ட திருவையாறு நகர் பிரிவு, திருவையாறு புறநகர் பிரிவு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி புறநகர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி நகர் பிரிவுகளுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உயர் மின்னழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் உள்ள மரக்கிளைகள் அகற்றுதல், பழுதான மின் கம்பங்கள் மாற்றுதல், தொய்வாக உள்ள மின்கம்பங்கள் கம்பிகள் சரி செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
இந்தபணிகள் நடைபெறும் நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை உள்ள நாட்களில் அவ்வப்போது மின் வினியோகம் தடைப்படும். அதன்படி திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி, கச்சமங்கலம், மாரனேரி, இளங்காடு, கல்லணை, பாதிரக்குடி சுக்காம்பார், கோவிலடி, விஷ்ணம்பேட்டை, கூத்தூர், சாத்தனூர், கண்டமங்கலம், நடுக்காவேரி, திருவையாறு, திங்களூர், விளாங்குடி, காருகுடி, பூண்டி, நாகாச்சி, திருச்செனம்பூண்டி, பொதகிரி, மைக்கேல்பட்டி, வரகூர், கருப்பூர், விளாங்குடி, செம்மங்குடி, காருகுடி, மணத்திடல், அன்பதுமேல்நகரம், மகராஜபுரம், செம்மங்குடி, புனவாசல் திருப்பந்துருத்தி, நடுக்கடை, கண்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் மின்தடைகளை பொறுத்துக்கொண்டு மின் பாதையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த தகவலை திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.