நாகையில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

நாகையில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-18 10:18 GMT
நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவன் தெற்குவீதியில் உள்ள ஒரு மளிகைக் கடையின் பூட்டை மர்மநபர் உடைத்துக் கொண்டிருந்தார். உடனே அருகில் சென்று பார்த்தபோது போலீசாரை, கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். 

இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தாமரைக்குளம் தென்கரையை சேர்ந்த அலயாஸ் விஜய் (வயது 24) என்பதும், மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்