பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி இந்திரா (வயது 43).

Update: 2021-06-18 06:04 GMT
நேற்று முன்தினம் இந்திரா தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சசிகுமார் (38) ஏற்கனவே தங்களுக்குள் இருந்த நிலத்தகராறை மனதில் வைத்துக்கொண்டு அவரையும் 
அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு சென்றார்.

இதுகுறித்து இந்திரா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்