செங்கல்பட்டு மாவட்ட தடுப்பூசி மையங்களில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கருங்குழி, அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை நுகர்பொருள் கூட்டுறவு கூடுதல் செயலாளர் முகமது நசிமுத்தீன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் ராவ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட நுகர்பொருள் வருவாய் அலுவலர் சீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் ராகுல் நாத் மதுராந்தகம், கருங்குழி, அச்சரப்பாக்கம் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் மையங்களில் சென்று பார்வையிட்டார். அப்போது மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணன், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.