பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு.வின் சாலை போக்குவரத்து மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட பொருளாளர் வேலுமணி தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகி உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரில் 5 ரோடு உள்பட 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.