சாலையோரம் பிணமாக கிடந்த கொத்தனார்

சாலையோரம் கொத்தனார் பிணமாக கிடந்தார்

Update: 2021-06-17 21:21 GMT
திருமயம்
திருமயம் அருகே உள்ள சந்தன விடுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 50). கொத்தனாரான இவர் நேற்று காலை சந்தன விடுதி செல்லும் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து திருமயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்