நெல் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

விக்கிரமங்கலம் அருகே நெல் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது.

Update: 2021-06-17 20:44 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து ஒரு லாரி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் அருகே உள்ள அயன் சுத்தமல்லியில் இருக்கும் ஒருங்கிணைந்த நெல் குடோனுக்கு சென்றது. குணமங்கலம் வழியாக அரியலூர் நோக்கி சென்றபோது, குணமங்கலம் சாலையில் உள்ள மேட்டுப் பகுதியில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்கி ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில்குமார்(வயது 35) காயமின்றி உயிர் தப்பினார். லாரியில் இருந்து நெல்மூட்டைகள் சாலையோர பள்ளத்தில் சரிந்து கிடந்தன. லாரி கவிழ்ந்து கிடப்பதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் லாரிக்குள் இருந்து டிரைவர் செந்தில்குமாரை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், சரிந்து கிடந்த ெநல் மூட்டைகளை குடோன் தொழிலாளர்கள் மூலம் வேறு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்