லாரியை மறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

லாரியை மறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-17 20:44 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த தமிழரசனின் மகன் சக்திவேல்(வயது 26). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் சாலையில் நின்று, எதிரே வந்த கொரோனா நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து அதன் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டு, டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து லாரி டிரைவர் கீழப்பழுவூைர சேர்ந்த வீராசாமி(30) திருமானூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சக்திவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்