பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது
பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
மதுரை
திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி சத்யா(வயது 26). இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அங்கு ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்த அவரை வாலிபர் ஒருவர் மிரட்டி பணத்தை பறித்து உள்ளார். அவர் உடனே சத்தம் போட அந்த வழியாக சென்றவர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த நாராயணன்(26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.