நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி தென்காசி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை தென்காசி சக்தி நகர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அருண் சங்கர் தலைமை தாங்கினார். தென்காசி நகர தலைவர் மோதி, தொகுதி தலைவர் அழகு பாண்டியன், துணைத்தலைவர் நயினா முகமது, செய்தி தொடர்பாளர் கணேசன், லஞ்ச ஒழிப்பு பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.