கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

Update: 2021-06-17 18:54 GMT
சாத்தூர், ஜூன்.
சிவகாசி தாலுகா பூசாரிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வௌ்ளைச்சாமி (வயது 21) என்பவர் ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தனது நண்பருடன் சேர்ந்து காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடினார். அப்போது அருகில் இருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார். தகவல் அறிந்ததும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையில் விரைந்து வந்து வெள்ளைச்சாமியை பிணமாக மீட்டனர். இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்