கொரோனா பரிசோதனை முகாம்

கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-17 18:45 GMT
லாலாபேட்டை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்கள் சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று லாலாபேட்டை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் ஹரிகரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சளி, இருமல் மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் உடல் உபாதைகள் குறித்த பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்