கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழப்பு
திருச்சியில் கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழந்தனர்.;
திருச்சி,
திருச்சியில் கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழந்தனர்.
புதிதாக 283 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 283 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 66,374 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 3,471 பேர் உள்ளனர். 1,133 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 62,092 ஆகும்.
16 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகி ச்சை பெற்ற 16 பேர் நேற்று உயிரிழந்தனர். இறந்தவர்களில் 7 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 811 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் 8 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று உயிரிழப்பு இருமடங்காக உயர்ந்து 16 பேர் ஆனது.
வேகமாக காலியாகும் படுக்கைகள்
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.
நேற்றைய தினம் ஆக்சிஜன் படுக்கை 1,012, சாதாரண படுக்கை 1,108, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை 157 என மொத்தம் 2,277 படுக்கைகள் காலியாக உள்ளன.