நர்த்தன விநாயகர் கோவிலில் யாக பூஜை

நர்த்தன விநாயகர் கோவிலில் யாக பூஜை நடந்தது.

Update: 2021-06-17 18:31 GMT
குளித்தலை
குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றின் கரையில் நர்த்தன விநாயகர் கோவில்‌ உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 5 ஆண்டுகள் முடிவடைந்து, 6-ம் ஆண்டு தொடங்கியது. இதையொட்டி கோவில் உள்ள சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இந்த கோவில் வளாகத்தில் மகாலெட்சுமி, மகா கணபதி யாகபூஜை நடந்தது. மேலும் இதில் கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்து உலக மக்கள் நலன் பெற வேண்டியும், தொழில் விருத்தி, குழந்தைகளுக்கு கல்வி, செல்வம் உள்பட அனைத்தும் கிடைத்து அவர்கள்‌ சுபிட்சமாக இருக்க வேண்டியும் யாக பூஜை செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த பூஜையில் மிகக் குறைந்த அளவிலான பக்தர்களை அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்