ரூ.40 ஆயிரம் புகையிலை பறிமுதல்; வியாபாரி கைது

விளாத்திகுளம் அருகே ரூ.40 ஆயிரம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனர்.

Update: 2021-06-17 17:34 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே புதூர் பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் புதூர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

நாகலாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மகாலிங்கம் (வயது 25) என்பவரது கடையில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரி மகாலிங்கத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்