கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

நம்புதாளையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-06-17 17:34 GMT
தொண்டி, 
நம்புதாளையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பைபர் படகு

தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த ராக்கு என்பவரின் மகன் பொன்னையா (வயது44). மீனவரான இவர் நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மாரிச்செல்வம் (40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பொன்னையா மற்றும் பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் (28), நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மணி (30) மணிகண்டன் (45) உள்பட 6 பேர் கடலுக்குள் சுற்றிப்பார்ப்ப தற்காக சென்றுள்ளனர். அப்போது படகில் இருந்து பொன்னையா கடலில் தவறி விழுந்துவிட்டாராம். உடனே கரைக்கு வந்த அவருடன் சென்ற மற்ற நபர்கள் பொன்னையா படகில் இருந்து கடலில் தவறி விழுந்து விட்டதாகவும் அவரை தேடி பார்த்ததில் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
அதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர்கள் பொன்னையாவை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொன்னையாவை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவரது உறவினர்கள் கடலில் தேடிபார்த்தபோது கடலில் பிணமாக மிதந்த பொன்னையா உடலை மீட்டுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவிபட்டினம் கடலோர காவல் நிலைய போலீசார் அவரது சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நம்புராஜேஷ் ஆகியோரும் விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்