ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி - நள்ளி ரெயில் நிலையங்களுக்கு இடையே தோட்டிலோவன்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், சங்கரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வாலிபர் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 33) என்பதும், ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.