தொண்டி,
திருவாடானை தாலுகா சோழகன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகையா (வயது55). தையல் தொழிலாளி.இவர் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது தீர்த்தாண்டதானம் பஸ் நிறுத்தம் அருகே நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.