டெல்டாவில், கொரோனாவுக்கு 17 பேர் பலி; ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று
டெல்டாவில் கொரோனாவுக்கு 17 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று உறுதியானது.;
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 569 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 121 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40, 55, 68, 68 வயதுடைய 4 பெண்களும், 48, 65, 70, 75 வயதுடைய 4 ஆண்களும் என 8 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 472 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 33 ஆயிரத்து 330 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56, 65 வயதுடைய 2 பெண்களும், 43, 53, 70, 80 வயதுடைய 4 ஆண்களும் என 6 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 323 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 33 ஆயிரத்து 563 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண்ணும், 60, 65 வயதுடைய 2 ஆண்களும் என 3 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.