18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சுழற்சி முறையில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மின்தடை - செயற்பொறியாளர்கள் தகவல்
18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சுழற்சி முறையில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர்கள் கூறியுள்ளனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதையில் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி ரெயிலடி பகுதி, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கொண்டல், பெரம்பூர், திருநகரி, பழையார், புதுப்பட்டினம், கொள்ளிடம், திட்டை, செம்மங்குடி, வடகால் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் வருகிற 19 -ந் தேதி (சனிக்கிழமை) வைத்தீஸ்வரன் கோவில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட தென்பாதி, கீழ தென்பாதி, ஆத்துக்குடி, புங்கனூர், தேனூர், கொண்டல், அகனி, மாதானம், நல்லூர், மகேந்திரப்பள்ளி, தாண்டவன்குளம், பழையபாளையம், திட்டை, திருக்கருகாவூர், திருமுல்லைவாசல், வருஷபத்து மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அரசூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாதிரவேளூர் பகுதியில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது. இதேபோல் திருவெண்காடு, எடமணல் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, தொடுவாய், கூழையார், வேட்டங்குடி ஆகிய பகுதிகளுக்கு வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
செம்பனார்கோவில் உப கோட்டத்திற்கு உட்பட்ட தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை சுழற்சி அடிப்படையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட தேதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.. அதன் விவரம் வருமாறு:- நாளை (வெள்ளிக்கிழமை) தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளகோவில் பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு ஆணைக்கோவில், செம்பதனிருப்பு, அல்லிவிளக்கம், கருவி, தலச்சங்காடு, கிடங்கல், மாமாகுடி, சின்னங்குடி, ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதைபோல 19- ந் தேதி (சனிக்கிழமை) செம்பனார்கோவில், பரசலூர், முடிகண்டநல்லூர், புன்செய், கிடாரங் கொண்டான், கீழையூர், மேலப்பாதி, மேலையூர், கஞ்சாநகரம், ராதாநல்லூர், ஆலங்காடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பொறையாறு, ஒழுகைமங்கலம், எருக்கட்டாஞ்சேரி, சந்திரபாடி, தில்லையாடி, திருவிடைக்கழி, டி. மணல்மேடு வளையசோழன், கண்ணங்குடி, கிள்ளயூர், மாத்தூர் படுகை, மேமாத்தூர், கீழ்மாத்தூர், ஆறுபாதி, புதுதிருசம் பள்ளி, தருமகுளம், பூம்புகார் வானகிரி, மணிகிராமம், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
24-ந்தேதி (வியாழக்கிழமை) காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர், அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்கடையூர், திருமெய்ஞானம், பி.பி. நல்லூர், தாழம்பேட்டை, வலத்தான்பட்டினம், காலகஸ்திநாதபுரம், மேலையூர், மேலப்பெரும்பள்ளம், இளையமதுக்கூடம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.