திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆல்பி ஜான் வர்கீஸ் பொறுப்பேற்பு
திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று காலை 7 மணி அளவில் முறைப்படி கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பா.பொன்னையா சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை ஆணையராக பணிபுரிந்து வந்த ஆல்பி ஜான் வர்கீஸ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் 22-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொணடார். புதியதாக பதிவேற்ற கொண்ட ஆல்பி ஜான் வர்கீசுக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வித்யா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.