கோத்தகிரி
நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் கோத்தகிரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. காமராஜர் சதுக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று காலை நடந்த முகாமை ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது. இதில் கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.