சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 9 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள் உள்பட பலருக்கு கருப்பு பூஞ்சை என்ற நோயும் தாக்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை நோய்க்கு 223 பேர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் இதுவரை 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.