ரெயில் நிலையத்தில் போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை

ரெயில் நிலையத்தில் போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை

Update: 2021-06-16 21:33 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தால் போலீசார் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தால் எத்தகைய சூழ்நிலை நிலவும் என்பதை ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் சிலர் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். குண்டு வெடிப்பில் சிக்கி சிலர் ரத்தக் காயத்துடன் உடல் சிதறி கிடப்பது போன்றும், உயிருக்கு போராடும் சிலரை போலீசார் மீட்பது போன்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது போன்றும் போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும் குண்டு வெடிப்பில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்களை எவ்வாறு மீட்பது? அவர்களுக்கு எப்படி முதலுதவிசிகிச்சை அளிப்பது? போன்ற ஒத்திகையும் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்