சிமெண்டு ஆலைக்கு அதிகளவு கற்களை ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு
சிமெண்டு ஆலைக்கு அதிகளவு கற்களை ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ரா டெக் சிமெண்டு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த சிமெண்டு ஆலைக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கற்கள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் காரைக்காலுக்கு வரும். அங்கிருந்து அந்த மூலப்பொருட்கள் காண்டிராக்டர்கள் டிப்பர் லாரிகளில் ஏற்றப்பட்டு சிமெண்டு ஆலைக்கு கொண்டு வரப்படும். வழக்கம்போல கப்பல் மூலம் வந்த மூலப்பொருளான கற்கள் டிப்பர் லாரிகளில் ஏற்றி வரப்பட்டது. ஆனால் 34 டன் கொண்டு வரவேண்டிய 14 சக்கர டிப்பர் லாரியில் 70 டன்னுக்கும் மேலான கற்களை கொண்டு வருவதாக தெரிய வந்தது.இதனையறிந்த உள்ளூர் டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வருவதால் சாலைகள் பழுதடைகிறது என்று கூறி வி.கைகாட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலை நிர்வாகத்தினர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.