நகை தொழிலாளி தற்கொலை முயற்சி

திசையன்விளையில் நகை தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2021-06-16 19:36 GMT
திசையன்விளை:

திசையன்விளை தங்கம் திருமண மண்டபம் 2-வது தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 45) நகை தொழிலாளி. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நகை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த பன்னீர் செல்வம் நேற்று திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் சந்திப்பில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, தண்ணீரை ஊற்றினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பன்னீர்செல்வத்தை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்