கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்;

Update: 2021-06-16 19:27 GMT
மதுரை
மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியம். இவரது மூத்த மகன் குமார் என்பவர் மைனர் பெண்ணை காதலித்து திருமணம் முடித்ததாக தெரிகிறது. அதனை தாய் பாக்கியம் கண்டித்து உள்ளார். அதனால் குமார், தனது தாயார் பாக்கியம் மற்றும் சகோதரன் நாகராஜனை தாக்க முயற்சித்துள்ளார். அதனால் விரக்தி அடைந்த பாக்கியம், தனது மகன் நாகராஜனுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கேனில் இருந்த மண் எண்ணெயை தன் மீதும், மகன் நாகராஜன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்