ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் குளங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் குளங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு;
கோவை
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.62.17 கோடியில் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், ரூ.31.47 கோடியில் புனரமைக்கப்பட்ட செல்வசிந்தாமணி குளம், ரூ.67.86 கோடியில் புனரமைக்கப்பட்டு வரும் வாலாங்குளம் ஆகிய குளங்களை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குளக்கரையில் நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன் கூடிய இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத்திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், பாதுகாப்பு கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.