தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.;
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்களான 18 தூய்மை பணியாளர்களுக்கு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையகம்) சுப்பாராஜூ, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.