விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு போனது.;

Update: 2021-06-16 19:03 GMT
களக்காடு:

களக்காடு அருகே சிங்கிகுளம் மலையடியை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 43). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். 

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூட்டிய வீட்டில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்