பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் அலுவலகம்

ராஜபாளையத்தில் ெபாதுமக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2021-06-16 18:33 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் நகர் பகுதி பொதுமக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் போக்க ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் புதிதாக பொதுமக்களின் குறை தீர்க்கும் அலுவலகத்தை  தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து, பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுமக்களின் குறைகளை போக்க தனி அறையும், தனி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளது எனவும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களை அந்தந்த பிரிவு அல்லது துறைக்கு அனுப்பி 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
இதில் நகராட்சி பொறியாளர் தங்கப்பாண்டி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்