கந்தம்பாளையம் அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் மீது வழக்கு
கந்தம்பாளையம் அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் பிரிவு ரோட்டில் நல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தோக்கவாடியை சேர்ந்த ரவி (வயது 42) என்பதும், திருச்சி மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.